×

நல்லம்பள்ளி அருகே 11 வயது சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்: போலீசார் விசாரணை

 

நல்லம்பள்ளி, ஜூலை 3: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமி, நேற்று முன்தினம் வீட்டில் குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த திருமணமான 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சிறுமி குளிப்பதை தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இந்த தகவல் கிராமம் முழுவதுமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார், வீடியோ எடுத்ததாக கூறப்பட்ட வாலிபரை, நேற்று காவல் நிலையத்துக்கு நேரில் வரவழைத்தனர். தர்மபுரி டிஎஸ்பி சிவராமன் தலைமையிலான போலீசார், அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : NALLAMBULA SCHOOL ,Nallampalli ,Nallampalli, Dharmapuri district ,Mundinam ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...