×

மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் மூட்டு அறுவை சிகிச்சை துறையின் 10 ஆண்டு நிறைவு விழா

சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் எலும்பியல் மருத்துவத்தில் மூட்டு அறுவை சிகிச்சை குறித்த சாக்கெட் சயின்ஸ் 2021 என்ற பயிற்சியின் 10ம் ஆண்டு நிறைவு விழா மியாட் மருத்துவமனை அரங்கில் நடந்தது. விழாவிற்கு மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் தலைமை வகித்தார். இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியின்போது மருத்துவ உபகரணங்கள் வழங்கிய ஜான்சன் அண்டு ஜான்சன நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சந்திப் மக்காருக்கு மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். அப்போது மருத்துவ குழுவினருடன் இருந்தனர்.

இதுகுறித்து மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் கூறுகையில், “எலும்பியல் மருத்துவத்தில் மூட்டு அறுவை சிகிச்சை துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போதைய தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது. பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மூட்டு பிரச்னை ஏற்படுகிறது. இந்த மூட்டு மாற்று சிகிச்சை 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். தற்போது புதிய தொழில் நுட்பத்துடன் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம்” என்றார்.

Tags : Department ,Manapakkam Miad Hospital ,
× RELATED கோடை காலங்களில் மனிதர்களை போல...