×

தெய்வானை நகரில் சாலை வசதி வேண்டும் மக்கள் வலியுறுத்தல்

சிவகாசி, மார்ச் 11: சிவகாசி தெய்வானை நகரில் சாலை வசதி இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சிவகாசி நகராட்சி  தெய்வானை நகரில்  100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.  இங்கு அச்சகங்கள், பாலித்தீன் கம்பெனி, பட்டாசு கடை, கட்டிங், லேமினேசன் கம்பெனிகள் இயங்கி வருகிறது.  நகரின் மைய பகுதியை ஒட்டி தெய்வானை நகர் அமைந்துள்ளதால் இப்பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் ஏராளமான நிறுவனங்கள், வீடுகள் புதிது புதிதாக கட்டப்பட்டு வருகிறது. ஆனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. தெய்வானை நகர்காந்தி ரோட்டில் சாலை வசதி இல்லை. இதனால் மழை காலங்களில் மண் சாலையில் நீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், மக்கள் அலுவலகம், வீடுகளுக்கு  செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள வீடுகளுக்கு வாறுகால் வசதி செய்து தரப்படவில்லை. ஏற்கனவே கட்டப்பட்ட  வாறுகால் பணி தரமாக நடைபெறாததால் வாறுகால் சேதமடைந்து கழிவுநீர் செல்ல வழியின்றி வீடுகளுக்கு அருகிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இங்கு அடிப்படை வசதி செய்து தர பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Deivanai ,
× RELATED பொன்னமராவதி சிவன் கோயிலில் வைகாசி மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு