ராஜபாளையம் நகராட்சியில் தேர்தல் விழிப்புணர்வு கோல போட்டி

ராஜபாளையம், மார்ச் 11: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் துரிதமாக செய்து வருகிறது. ராஜபாளையம் நகராட்சி சார்பில் அலுவலகம் முன்பு, வளாகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை பொதுக்களிடம் வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது.  இதில் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், மகளிர் குழுவினர் என 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பலவிதமான வண்ண கோலங்களை வரைந்தனர். குறிப்பாக ஓட்டு போடும் விதமாக கை விரலை வரைந்ததது, வாக்குப்பதிவு நாளன்று அனைவரும் வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு கோலங்கள் சிறப்பை பெற்றன.

Related Stories:

>