உத்தமபாளையத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

உத்தமபாளையம், மார்ச் 11: உத்தமபாளையம் பேரூர் திமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உத்தமபாளையம் ஒன்றிய பொறுப்பாளர் அணைப்பட்டி முருகேசன் தலைமை வகித்தார். பேரூர் பொறுப்பாளர் மீரான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின்படி, உத்தமபாளையத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பூத் கமிட்டி தேர்ந்தெடுப்பது, தற்போது 10 பேர் கொண்ட கமிட்டி அமைத்து வார்டு வாரியாக வாக்காளர்களை பிரிப்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் திமுக.வை கம்பம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் செயலாளர் முகமது யூனுஸ், முன்னாள் சேர்மன் முஹம்மது அப்துல் காசிம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி, அமானுல்லா, பொன் பகவதி, ரபீக், நசீர் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>