×

நாராயணத்தேவன்பட்டியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்

கம்பம், மார்ச் 11: கம்பம் வட்டாரத்திற்கு உட்பட்ட நாராயணத்தேவன்பட்டியில் வட்டார அளவிலான டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன் தலைமையில் அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களும் இந்த தடுப்பு முகாமில் கலந்து கொண்டனர். டெங்குவை பரப்பும் கொசுப்புழு உருவாகாமல் இருக்க தண்ணீரை பிடித்து பாதுகாப்பாக வைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், தொட்டிகளில் பிடித்து வைக்கும் தண்ணீரை மூடி வைக்கவும், துணியினால் வண்டு கட்டி வைக்கும் நடை முறைகள் பற்றியும் கேகே பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் சிராஜூதீன் பொதுமக்களுக்கு விளக்கி கூறினார். அனைத்து வீடுகளிலும் டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளனவா என கண்காணிக்கப்பட்டு தண்ணீர் தொட்டிகள் கவிழ்த்து விடப்பட்டது. அனைத்து வீதிகளிலும், வீடுகளிலும் பைரித்ரம் கலந்த புகை மருந்து அடிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற செயலாளர் ஈஸ்வரன் செய்திருந்தார்.

Tags : Narayanathevanpatti ,
× RELATED கம்பம் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு...