மகளிர் தின கோலப்போட்டி

இளையான்குடி, மார்ச் 11: இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சார்பில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, 55 ஊராட்சிகளில், அனைத்து பாகங்களிலும் உள்ள கிராமங்களில் கோலப்போட்டி நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில், நூறு சதவீத வாக்குகள் பதிவாவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மகளிர் குழுக்கள் மற்றும் நூறு நாள் பணியாளர்களுக்கு கோலப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. தாயமங்கலத்தில் நடைபெற்ற கோலப் போட்டிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் மலைராஜ் முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Related Stories:

>