கமுதி பகுதியில் பிரதோஷ வழிபாடு

கமுதி, மார்ச் 11: கமுதி பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது. கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில்,நேற்று பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, நந்தீஸ்வரருக்கு பால்,பன்னீர், திரவியபொடி,மஞ்சள்,தயிர், பஞ்சாமிர்தம், திருநீறு, இளநீர் உட்பட 12 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கமுதி அருகே மண்டலமாணிக்கம் அரும்பவள நாயகி சமேத கைலாயநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Related Stories: