×

உங்க கட்சி & கூட்டணி கட்சில இருக்குற “காமுகர்களை” ஒழிச்சாலே பெண்கள் பாதுகாப்பா இருப்பாங்க.!! முதல்வருக்கு நயினார் கொடுத்த ஐடியா

சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களை, குழந்தைகளை பாதுகாப்போம் என்று மூளைச்சலவை செய்து ஆட்சியில் அமர்ந்துள்ள முதல்வர் விஜய், ஆட்சியில் அவர்களுக்கு துளியும் பாதுகாப்பு கிடைக்காது என்பதை பல்வேறு கொடூர சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.

இந்த நிலையில் தனது சொந்த கட்சிக்குள்ளும், தனது கூட்டணிக் கட்சிக்குள்ளும் இருக்கும் காமுகர்களை முதல்வர் விஜய் என்றைக்கு முற்றிலுமாக ஒழிக்கிறாரோ, அப்பொழுதுதான் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.

இது தொடர்பான அறிக்கை ஒன்றில், காங்கிரஸ் அமைச்சர் விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டார் என்று வெளியான செய்தியின் சூடு தணிவதற்குள், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காங்கிரஸை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹரிநாராயணன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் பாதுகாப்பிற்காக முதல்வர் அமைத்த “சிங்கப்பெண்கள் பாதுகாப்பு படை”, தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குள் தான் முதலில் “ரெய்டு” நடத்த வேண்டும் போல. அந்தளவிற்கு ஆட்சி அதிகாரத்தை கேடயமாக வைத்துக் கொண்டு, தவெகவினரும், அவர்களின் கூட்டாளியான காங்கிரஸும் பெண்களிடம் பயமின்றி தொடர்ந்து பாலியல் அத்துமீறிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் சொந்தக் கட்சிக்குள்ளேயே பாலியல் குற்றச்சாட்டுகளால் கறைபடிந்த காங்கிரஸின் “கை”, தற்போது தமிழகப் பெண்கள் மீதும் தைரியமாக படர முயல்வது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறி உள்ளார்.

எனவே முதல்வர் விஜய் தனது சொந்தக் கட்சிக்குள்ளும், தனது கூட்டணிக் கட்சிக்குள்ளும் இருக்கும் காமுகர்களை என்றைக்கு முற்றிலுமாக ஒழிக்கிறாரோ, அப்பொழுதுதான் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று நயினார் நாகேந்திரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

 

Tags : Naynar ,Chennai ,Taweka ,Tamil Nadu ,Vijay ,
× RELATED தவெக ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் 5 ஆணவப்...