திருப்பரங்குன்றம் தொகுதியில் அகற்றப்படாத ஆளுங்கட்சி போர்டுகள் தேர்தல் அதிகாரிகள் கொர்...

திருப்பரங்குன்றம், மார்ச் 11: திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிமுக சின்னம் மற்றும் முதலமைச்சர் படம் பொறித்த போர்டுகள் அகற்றப்படாமல் உள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னரும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட இடங்களிலுள்ள அரசு அலுவலகங்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள சின்னங்கள் மற்றும் போர்டுகள் அகற்றப்படாமல் உள்ளது.  குறிப்பாக திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  ஆகியோரது படங்கள் பொறிக்கப்பட்ட போர்டு வைக்கப்பட்டுள்ளது.  இதே போல திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பானில் அதிமுக  சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிமுக தலைவர்களின் படங்கள், சின்னங்கள் அதிமுக வண்ணம் உள்ளிட்டவை அகற்றப்படாமல் உள்ளது. இதுகுறித்து தேர்தல்  ஆணையம், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என திமுக உள்ளிட்ட கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்

Related Stories:

>