நத்தத்தில் மகளிர் தின விழா

நத்தம், மார்ச் 11: நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உலக மகளிர் தின விழா நடந்தது. ஆணையாளர் அண்ணாத்துரை தலைமை வகிக்க, வட்டார வளர்ச்சி அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார். பணி மேற்பார்வையாளர் விஜயலட்சுமி வரவேற்றார். விழாவில் அனைவரும் வாக்களிக்க வேண்டியது ஜனநாயக கடமையாகும், மக்களிடம் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் வாக்களிக்க செய்ய வேண்டும், தேர்தல் விதிமீறல் குறித்து எந்த செயல்பற்றியும் தகவல் தெரியவந்தால் அவற்றை தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்து உரிய நடைமுறைக்கு உட்படுத்துவேன் உள்பட பல்வேறு கருத்துகள் அடங்கிய உறுதிமொழியை எடுத்து கொண்டனர். இதில் பணித்தள பொறுப்பாளர்கள், மகளிர் குழுவினர், ஊராட்சி செயலர்கள் பலர் கலந்து கொண்டனர். அலுவலக மேலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Related Stories:

>