×

திருவள்ளூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

 

திருவள்ளூர், ஜூலை 1: திருவள்ளூர் நகராட்சி, பெரியகுப்பத்தில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (2ம் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் ஏ.சேகர் தலைமை தாங்கி மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து மின்சார துறையின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்களை பெற உள்ளார்.

எனவே, திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் மின்துறை சம்பந்தமான புகார்கள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கலாம் என திருவள்ளூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Electricity Consumer Grievance Redressal Day ,Thiruvallur ,Thiruvallur Division ,Electricity Board Executive Engineer ,Office ,Periyakuppam, ,Thiruvallur Municipality… ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம்...