மகளிர் தின கருத்தரங்கம் பொது மருத்துவ முகாம்

திருப்பூர்,மார்ச்11: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர்  குமரன் மருத்துவமனை மற்றும் குமரன் மகளிர் கல்லூரி சார்பாக  கருத்தரங்கம் மற்றும் பொது மருத்துவ முகாம் அக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பெண் குழந்தைகளுக்கான மாதவிடாய் பிரச்னைகள் பற்றி விழிப்புணர்வு இக்கல்லூரியின் முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் தலைமையில் நடைபெற்றது. இதில்  குமரன் மருத்துவமனையின் பெண்கள் நல மருத்துவர் கலை செல்வி உரையாற்றினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற போது பொது மருத்துவ முகாமில் அனைவருக்கும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகளை மருத்துவ குழுவினர் சரிபார்த்தனர். மேலும் போது மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>