தேர்தலை முன்னிட்டு குற்றப்பின்னணியில் உள்ள 115 ரவுடிகள் கண்காணிப்பு

ஊட்டி, மார்ச் 11: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகள் குறித்து பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்புடைய 115 ரவுடிகள் கண்டறியப்பட்டு காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நன்னடத்தை சான்றிதல் கையெழுத்து போட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட எஸ்பி. பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: ‘நீலகிரி மாவட்டத்தில் 541 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.  சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து இதுவரை 489 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். 48 துப்பாக்கிகள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 4 துப்பாக்கிகள் இன்னும் ஒப்படைக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 115 ரவுடிகள் கண்டறியப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 51 இடங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். மற்றொரு கம்பெனி விரைவில் வர உள்ளனர், என்றார்.

Related Stories:

>