×

கோவை, பொள்ளாச்சியில் ேபாட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் பயோடேட்டா

கோவை,  மார்ச் 11:   கோைவ, பொள்ளாச்சியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு: கோவை தெற்கு: கோவை தெற்கு தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள  சேலஞ்சர் துரை என்கிற துரைசாமி (62) கோவை புதுசித்தாபுதூர் பாலசுந்தரம்  ரோட்டில் வசித்து வருகிறார். ‘‘சேலஞ்சர்ஸ் கெமிக்கல் அண்ட் பாலிமர்ஸ்  பிரைவேட் லிமிடெட்’’ என்னும் கெமிக்கல் ஆலை வைத்துள்ளார். எம்.ஏ. (சமூகவியல்) படித்துள்ளார். இவரது தந்தை பெயர் ராமசாமி கவுண்டர். மனைவி  பெயர் கண்ணம்மாள். செந்தில்குமார் என்ற மகன் உள்ளார். 2011ம் ஆண்டு  நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில்  போட்டியிட்டு வெற்றி பெற்றார். 5 ஆண்டு எம்.எல்.ஏ.வாக இருந்தார். கோவை மாநகர்  மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக இருந்தார். பின்னர், ஜெயலலிதாவால்  அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அ.தி.மு.க.  மூன்றாக உடைந்தபோது டி.டி.வி. தினகரன் அணிக்கு சென்றார். தற்போது,  அக்கட்சியில் கோவை மேற்கு மாவட்ட செயலாளராகவும், கட்சியின் அமைப்பு  செயலாளராகவும் உள்ளார்.   

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக கே.சுகுமார் (60)   அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், பொள்ளாச்சி சமத்தூர் அருகே உள்ள   கரட்டுபாளையத்தில் வசிக்கிறார். எம்.காம் படித்துள்ளார்.  கொங்கு வேளாளர்   கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். விவசாயம் மற்றும் ஆட்டோமொபைல் தொழில்   செய்கிறார். இவரது தந்தை கிருஷ்ணசாமி, தாயார் சின்னமணி. மனைவி   அர்த்தனாரீஸ்வரி. தீபக், தினேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
2001 முதல் 2006   வரை கோவை மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தார். 2009 முதல் 2014 வரை   பொள்ளாச்சி தொகுதி எம்.பி.யாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.   உடைந்தபோது டி.டி.வி.தினகரன் அணிக்கு சென்றார். தற்போது அ.ம.மு.க.வில் கோவை   தெற்கு மாவட்ட செயலாளராகவும், அ.ம.மு.க. ஆட்சிமன்ற குழு உறுப்பினராகவும்   உள்ளார்.

Tags : AIADMK ,Coimbatore, ,Pollachi ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!