×

இந்தியா-பாகிஸ்தான் போர் பொன்விழா ராணுவ வீரர்கள் கவுரவிப்பு

கோவை, மார்ச் 11: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே கடந்த 1971-ல்  நடந்த போரில், பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. இதை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி பொன் விழாவிற்கான நான்கு வெற்றி ஜோதிகளை கடந்த ஆண்டு டிசம்பர் 16-ல் ஏற்றினார். இந்த வெற்றி ஜோதி கோவை ரெட்பீல்ட்ஸில் உள்ள ராணுவ 110 பட்டாலியன் வளாகத்திற்கு வந்தது. இந்த ஜோதி வரும் 16-ம் தேதி வரை இங்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன் விழாவையொட்டி ஸ்டேஷன் கமாண்டர், கர்னல் பியூஸ் கதல் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று பொன்விழா நிகழ்ச்சி நடந்தது. இதில், விமானப்படை, கப்பல் படை, தரைப்படை என முப்படை வீரர்கள் பங்கேற்றனர். அப்போது, வெற்றி ஜோதி கொண்டுவரப்பட்டு மேடையில் ஏற்றப்பட்டது. பின்னர், போரில் பங்கேற்ற 150 ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது, அவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Tags : India ,Pakistan War Golden Jubilee ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...