- மயிலாடுதுறை
- மயிலாடுதுறை
- சந்தங்குடி
- தாரங்கம்பாடி, மயிலாடுதுர மாவட்டம்
- மாரிமுத்து மகன் பார்த்திபன்
- புடுபாளையம்
- மயிலாடுதுறை மாவட்டம்
- தாரங்கம்பாடி தாலூக்கா
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாந்தங்குடி கிராமத்தில் காதலன், காதலி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பார்த்திபன். இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். அருகில் உள்ள சாத்தன்குடி கிராமத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமியும், பார்த்திபனும், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. தொடர்ந்து பெண் வீட்டார் மீது பார்த்திபன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இவர்கள் மீது சாதி வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதனிடையே இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் சாந்தங்குடியில் உள்ள குமரவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு கொட்டகையில் தூக்கிட்ட நிலையில் அந்த 16 வயது சிறுமியும் பார்த்திபனும் சடலமாக தொங்கினர். இதை பார்த்த அந்த பகுதியில் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காக 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இருவரின் உடலை மீட்ட போலீசார் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் வீட்டார் ஆணவ கொலை செய்துவிட்டதாக இளைஞர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ஆணவ கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
