உழைப்பாளி மக்கள் கட்சி, திராவிடர் பேரவை தி.மு.க.வுக்கு ஆதரவு

ஈரோடு, மார்ச் 11:   உழைப்பாளி மக்கள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் முருகேசன் ஈரோட்டில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 40 லட்சம் போயர் சமுதாய மக்கள் தமிழகத்தில் கல் உடைப்பது, கட்டிடங்கள் கட்டுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து சமுதாய மக்களின் ஆதரவும் தி.மு.க.வுக்கு அளிக்கப்பட்டுள்ளதால், போயர் சமுதாய மக்களின் ஆதரவும் தி.மு.க.வுக்கு தெரிவிக்க முடிவு செய்து, வருகின்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு தி.மு.க.வின் வெற்றிக்கு உழைப்பாளி மக்கள் கட்சி பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திராவிடர் பேரவை ஆதரவு: தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு திராவிடர் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திராவிடர் பேரவை நிறுவன தலைவர் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தந்தை பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் வழியில் சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்டி, பாசிச அடக்கு முறைகளுக்கு எதிராக போராடி வரும் தி.மு.க.வுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திராவிடர் பேரவை தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை நேரில் சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>