ஈரா பேக்கரி திறப்பு விழா

ஈரோடு, மார்ச் 11:  ஈரோடு பெருந்துறை ரோட்டில் (கொங்கு பரோட்டா அருகில்) ஈரா பேக்கரி புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. ஈரா தி பேக் ஹவுஸ் என்ற பெயரில், ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு ஈரா பேக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு கேக், பிஸ்கெட், சாக்லெட் ஆகியவை பல்வேறு ரகங்களில், புதிய வடிவங்களில், மக்கள் விரும்பும் சுவைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன் புதிய பேக்கரியை திறந்து வைத்தார். ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் அக்னி சின்னசாமி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அனைவரையும் ஈரா பேக்கரி உரிமையாளர்கள் ரமேஷ், காளிக்குமார், விஜய் கோயல், நெடுமாறன், நந்தகுமார் ஆகியோர் வரவேற்றனர்.

Related Stories:

>