×

கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா

 

காரைகுடி, ஜூன் 30: காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுரியில் 19ம் ஆண்டு, முதலாம் ஆண்டு வகுப்புகள் மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சசிகுமார் வரவேற்றார். விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்து பேசுகையில், மாணவர்கள் படிக்கும் காலத்தில் தங்களின் கடமையை சரியாக செய்ய வேண்டும். படிப்பை தவிர வேறு திசைகளில் உங்களின் கவனத்தை சிதற விடக்கூடாது. கல்வி ஒன்றுதான் மிகப்பெரிய சொத்து. நாம் கல்வி கற்று மிகப்பெரிய பொறுப்புக்கு வந்தால் ஒரு தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்தலாம். சமூக வலைதளங்களில் உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள். பாலிடெக்னிக் படிப்புக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு உள்ளது. எங்கள் கல்வி நிறுவனத்தை பொறுத்தவரை இங்குபடிக்கும் அனைவருக்கும் நிச்சயம் வேலைவாய்ப்பு பெற்று தருகிறோம். இங்குபடித்த பலர் தனியார் மற்றும் வெளிநாடுகளில் அதிக சம்பளத்துடன் பணியாற்றுகின்றனர்.

படித்து முடிக்கும் முன்பே 3ம் ஆண்டிலேயே உங்கள் திறமைக்கு ஏற்ப பணி வாய்புகளை பெற்று தருவோம். எங்கள் கல்வி நிறுவனத்தில் படித்தால் நிச்சயம் வேலை என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். படிப்புடன் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்றார். பட்டிமன்ற பேச்சாளர் அட்சயா லோகேஷ் குமார் சிறப்புரையாற்றினார். விவேகானந்தா கல்வி அறக்கட்டளை இயக்குநர் ராஜகோபால், அறக்கட்டளை இயக்குநர் உருமநாதன், அறங்காவலர் பிரசன்னா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விவேகானந்தா கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆரோக்கியராஜ், விவேகானந்தா குளோபல் நர்சிங் கல்லூரி முதல்வர் சோபியா ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். வாரிய தேர்வில் அனைத்துத் துறையிலும் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. துறை தலைவர் சுபாகர் நன்றி கூறினார்.

Tags : Vivekananda Polytechnic College ,Kummangudi ,Karaikudi ,Sasikumar ,Vivekananda Educational Group… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...