×

பைக் மீது லாரி மோதி மாணவர் படுகாயம்

 

சிவகாசி, ஜூன் 30: பைக் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். சிவகாசி சேனைபுரம் காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகன் சங்கர்(20). இவர் சிவகாசியில் உள்ள ஒரு கேட்டரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது மோட்டார் பைக்கில் காரனேசன் பஸ் ஸ்டாப் அருகில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி இவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சிவகாசி போலீசார் விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடியை சேர்ந்த விமல்ராஜ் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Sivakasi ,Larry Moti College ,Suresh Kumar ,Shankar ,Sivakasi Senaipuram Colony ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...