×

சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி 18 பேரிடம் ரூ.9.36 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது

 

நெய்வேலி, ஜூன் 30: கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 11 வாள் வீதியை சேர்ந்தவர் மருதையா பிள்ளை மகன் பாலசுப்பிரமணியன்(65). இவர் நெய்வேலியில் மசாலா பொருட்கள் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர்களான நெய்வேலி பகுதியில் உள்ள ஏஜென்சி உரிமையாளர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 18 பேருடன் இணைந்து இந்தோனேஷியா பாலித்தீவு செல்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திருவள்ளூர் பெருமாள் பட்டு பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ரஹீம் மகன் இலியாஸ்(45), அதே பகுதியை சேர்ந்த பகுருதீன் மகன் அஷிக்(32) ஆகியோரிடம் பணம் கட்டியுள்ளனர்.மேலும் விமான டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக 18 நபரிடம் தலா ரூ.52,000 விதம் ரூ.9,36,000 பணத்தை வசூல் செய்துள்ளனர்.

இந்நிலையில் 18 பேரும் இந்தோனேசியா பாலித்தீவு செல்வதற்காக தயாரானபோது, டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து டிக்கெட் கேட்டுள்ளனர். அப்போது இந்தோனேசியா செல்வதற்காக டிக்கெட்டை டிராவல்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளனர். இந்த டிக்கெட் குறித்து சந்தேகம் ஏற்பட இதுகுறித்து விசாரணை செய்தபோது அது போலி டிக்கெட் என தெரியவந்தது. இதுகுறித்து டிராவல்ஸ் உரிமையாளர்கள் இலியாஸ் மற்றும் ஆஷிக்கிடம் கேட்டபோது, தற்போது போர்சூழல் காரணமாக டிக்கெட் விலை உயர்ந்து விட்டது என்றும், அதனால் நாங்கள் போலியாக டிக்கெட் வழங்கினோம் எனக்கூறி உங்களுக்கு தர வேண்டிய பணத்தை நாங்கள் செலுத்தி விடுவதாக கூறியுள்ளனர்.

மேலும் இது சம்பந்தமாக மேற்கண்ட 18 பேரிடம் பணம் கொடுப்பதாக கூறி அவர்களை ஏமாற்றி வந்தனர். இந்நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் நெய்வேலி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த இலியாஸ், ஆஷிக் ஆகிய 2 பேரையும் கைது செய்து, நேற்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags : Neyveli ,Balasubramanian ,Marudaiya Pillai ,Val Veediya ,Neyveli Taluk 11, ,Cuddalore district ,Neyveli… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...