முக்கூடலில் திமுக நிர்வாகி கொலையில் கைதானவர் மீது குண்டாஸ்

நெல்லை, மார்ச் 10:  முக்கூடலில் திமுக இளைஞரணி நிர்வாகி கொலையில் கைதானவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முக்கூடல் அருகே உள்ள வடக்குஅரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (38). நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். இவரை கடந்த மாதம் 18ம் தேதி இதே பகுதியை சேர்ந்த உறவினரான ஐயப்பன் (50) என்பவர், முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். முக்கூடல் போலீசார் வழக்கு பதிந்து ஐயப்பனை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நெல்லை எஸ்பி மணிவண்ணன், முக்கூடல் பொறுப்பு இன்ஸ்பெக்டர் கோகிலா ஆகியோர் கலெக்டர் விஷ்ணுவிற்கு பரிந்துரை செய்தனர். அவரது உத்தரவின் பேரில் போலீசார் நேற்று பாளை மத்திய சிறையில் ஐயப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories:

More