×

அம்பை, கல்லிடைக்குறிச்சியில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

அம்பை, மார்ச் 10:  அம்பை, கல்லிடைக்குறிச்சியில் துணை ராணுவம், காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடந்தது. ஏப். 6ம் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அம்பை சட்டமன்ற தொகுதி மக்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலமாக உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

 டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையில் அம்பையில் கிருஷ்ணன் கோயிலில் இருந்து மெயின்ரோடு வழியாக ஸ்டேட் பாங்க் வரையிலும், கல்லிடைக்குறிச்சியில் கோட்டைத்தெருவில் இருந்து 6ம் நம்பர் ரோடு வழியாக பேரூராட்சி அலுவலகம் வரையிலும் நடந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,  இதில் காவல்துறையினர், துணை ராணுவத்தினர் என நூற்றுக்கணக்கானோர் மிடுக்குடன் பங்கேற்றனர்.


Tags : Ambai ,Kallidaikurichi ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் 3 தாசில்தார்கள் திடீர் மாற்றம்