×

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக துபாய் சென்ற நடிகைக்கு தொற்றுநோய்: மருத்துவமனையில் காதலன் உருக்கம்

துபாய்: துபாயில் தனது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற பிரபல நடிகை ஜாஸ்மின் பாசின் தீவிர தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னத்திரை நடிகை ஜாஸ்மின் பாசின் (34), தனது பிறந்தநாளைச் சிறப்பான முறையில் கொண்டாடத் திட்டமிட்டு தனது காதலன் அலி கோனியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாய் சென்றிருந்தார். அங்கு அவருக்குத் திடீரென கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சை பெற்று வரும் ஜாஸ்மின் பாசின் உடல்நிலை குறித்து அலி கோனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், ‘உன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடவே இங்கு வந்தோம், ஆனால் வாழ்க்கை வேறு சில திட்டங்களை வைத்திருந்தது; இப்போது பிறந்தநாள் நினைவுகளுக்குப் பதிலாக மருத்துவமனை அறையில் இருக்கிறோம். நீ வலியால் துடிப்பதைப் பார்ப்பதுதான் இந்தப் பயணத்தின் மிகக் கடினமான சூழ்நிலையாக மாறிவிட்டது; மீண்டும் ஆரோக்கியத்துடனும் புன்னகையுடனும் நீ திரும்புவதையே விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், தங்களுக்குத் திருமணம் நடக்கப்போவதாக வெளியான தகவல்களையும் அவர் மறுத்து அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜாஸ்மின் குணமடைய வேண்டி நடிகைகள் ருபினா திலைக், திவ்யங்கா திரிபாதி உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

Tags : Dubai ,Jasmine Bhasin ,Ali Kony… ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...