பூம்புகார் தொகுதி தரங்கம்பாடியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கூட்டம்

தரங்கம்பாடி, மார்ச் 10: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கூட்டம் நடந்தது.இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதை கடந்த வாக்காளர்களுக்கு தபால் வாக்கு கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பூம்புகார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வாசுதேவன் தலைமை வகித்தார். துணை தேர்தல் அலுவலர்கள் தரங்கம்பாடி தாசில்தார் இளங்கோவன், குத்தாலம் தாசில்தார் இளங்கோ முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதை கடந்த வாக்காளர்களுக்கு எவ்வாறு தபால் வாக்கு கொடுப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து வீடுவீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதை கடந்தவர்களை அடையாளம் கண்டு தபால் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு விருப்ப படிவங்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் பங்கேற்றனர்.

Related Stories:

More
>