×

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்

பெரம்பலூர், மார்ச் 10: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் சார் பாக சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப் பட்டது. இதில் வேந்தர் சீனிவாசன் பங்கேற்றார்.பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் சார்பில் உலக மகளிர் தினவிழா நேற்று முன்தினம் (8ம் தேதி) காலை கல்வி நிறுவன வளாகத்திலுள்ள கூட்ட அரங்கத்தில் நடை பெற்றது. தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியின் துணை முதல்வர் கஜலட்சுமி வரவேற்றார். இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவரும், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான சீனிவாசன் தலை மையேற்று மகளிர் தின விழாவினைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் அனந்த லட்சுமி கதிரவன் கலந்து கொண்டு பெண்களின் பெ ருமையைப் போற்றிப்பேசி னார். மேலும் இக்காலச் சூ ழலுக்கு தற்காப்புகலை பெண்களுக்கு அவசியம் எனவும் கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பேச்சாளர் ஷியாமளா ரமேஷ் பாபு மாணவிகள் தங்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் எவ்வாறு பெற வேண்டும் என்று மிக எளிமையான முறையில் எடுத்துக்கூறினார். மேலும் கல்லூரிப்பருவத்தில் கவ னச்சிதறல் ஏற்படக்கூடாது, தன்னம்பிக்கையை வளர்த் துக்கொள்ள வேண்டும். தான் பார்க்காத உலகை தன் பிள்ளைகள் பார்க்கவேண் டும் என்று நினைக்கும் பெற்றோர்களே கண்கண்ட தெய்வம் என்ற 3 கருத்துக் களை வலியுறுத்திப் பேசினார்.விழாவில் கல்விக் குழுமங்களின் உறுப்பினர்கள், முதல்வர்கள், பேராசியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் துறைத் தலைவர் தேவகி நன்றி தெரிவித்தார். விழா ஏற்பாடுகளை தனலட்சுமி சீனி வாசன் மகளிர் கலை அறி வியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


Tags : Women's Day ,Thanalakshmi Srinivasan College ,Perambalur ,
× RELATED மனவெளிப் பயணம்