×

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு

 

திருவாடானை, ஜூன் 29: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கொங்குமுட்டி பகுதியைச் சேர்ந்த பாலுச்சாமி மகன் பாலகிருஷ்ணன் (40). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சிவகங்கை – வந்தவாசி ரோடு பகுதியை சேர்ந்த கோபியிடம் தனது லாரியை ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார். ஆனால், உரிய பணத்தை கோபி கொடுக்காததால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று பாலகிருஷ்ணன் தனது உறவினர்களான குமரவேல்(36), பாலுச்சாமி (56) ஆகியோரிடம் பணத்தைத் தருவதாகக் கூறி கோபி அழைத்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கோபி மற்றும் அவரது ஆதரவாளர்களான 5 பேர் கும்பல், பாலகிருஷ்ணன், குமரவேல், பாலுச்சாமி ஆகியோரை வாள் மற்றும் அரிவாளால் வெட்டினர். இதுபற்றி திருவாடானை போலீசார் வழக்குப்பதிந்து 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

Tags : Thiruvadanai ,Balakrishnan ,Baluchamy ,Kongumutti ,Devakottai ,Sivaganga district ,Gopi ,Sivaganga-Vandavasi Road ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...