×

அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க கோரி திமுக மாணவரணி நடத்தவிருந்த போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு

 

சென்னை: திமுக மாணவரணி சார்பில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் விடியோ வெளியிட்ட சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். குழந்தைக்கு மாத்திரை கொடுக்க செல்போனில் வைத்து மாத்திரையை பொடியாக்கியதாக அமைச்சர் விளக்கம் அளித்திருந்த நிலையில், அவரை பதவி நீக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தை திமுக மாணவரணி அறிவித்தது.

இந்நிலையில் அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க கோரி திமுக மாணவரணி நடத்தவிருந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கபப்ட்டுள்ளது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடத்த வந்த திமுகவினரை போலீசார் கைதுசெய்து வருகின்றனர். போராட்டத்துக்கு அனுமதியில்லை என்று கூறி திமுகவினரை போலீசார் கைதுசெய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags : Dhimuka ,Minister ,Sarathkumar ,Chennai ,Dimuka ,
× RELATED தயாராக இருங்கள் எந்த நேரத்திலும்...