×

கும்பகோணம் ஜோஸ் ஆலுக்காஸின் மகளிர் தின கொண்டாட்டம்

திருச்சி, மார்ச் 10: கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸின் மகளிர் தினத்தை போற்றும் வகையில் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டு கேக் வெட்டினர்.விழாவில் முன்னாள் நகர்மன்ற தலைவர் ரத்னசேகர், நாட்டிய குரு கலைமணி நாட்டிய சிரோன்மணி ஜென்சிலாரன்ஸ், ஹோட்டல் டைமண்ட் ஏஞ்ஜலா பாபு, அன்னை கல்வி குழுமம் தாவூத்பீவி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தீபா ரவிக்குமார் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் மீராஸ்மாயில் புவனேஸ்வரி, உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். மகளிர் தனி சிறப்பு சலுகைகளான வைரங்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி. பிளாட்டினத்திற்கு 8 சதவீதம் வரை தள்ளுபடி. உங்கள் பழைய 22 காரட் தங்க நகைக்கு மாறாத புதிய தரச்சான்றிதழ் பெற்று தங்கம் மற்றும் வைர நகைகளை அதிநவீன டிசைன்களில் பெறலாம் என கிளை மேலாளர் பிஜ்ஜிபோல் தெரிவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை பிஆர்ஓ அஸ்ரப்அலி செய்துள்ளார்.

Tags : Kumbakonam ,Jose ,Alukas ,Women's Day ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...