வாஷிங்டன்: குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி, கடந்த 2024ல் சோலார் ஆலை அமைப்பதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர ஒப்புக் கொண்டதாகவும், இந்த தகவலை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அமெரிக்காவில் அதானி மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக அதானி தரப்பு குற்றச்சாட்டுக்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்தது.
இதை ஏற்றுக் கொண்ட அமெரிக்க நீதித்துறை வழக்கை தொடரப் போவதில்லை என கடந்த மே மாதம் அறிவித்தது. இதுதொடர்பாக அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதானி மீதான வழக்கை உடனடியாக தள்ளுபடி செய்ய மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கராபிஸ் மறுத்து விட்டார்.
வழக்கை வாபஸ் பெறுவதற்கான காரணங்களை விரிவாகவும் ஆதாரப்பூர்வமாகவும் விளக்குமாறு வரும் ஜூலை 13ம் தேதி வரை அவகாசம் வழங்கி அமெரிக்க நீதித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிபதி நிக்கோலஸ் முறையாக கையெழுத்திட்டு உத்தரவிடும் வரை இந்த கிரிமினல் வழக்கு நிலுவையிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
