×

எலான் மஸ்கிற்கு பிறகு அதிக சம்பளம் ரூ.7,744 கோடி சம்பளம் வாங்கும் இந்திய சிஇஓ

வாஷிங்டன்: பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு பிறகு உலக அளவில் அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெருமை இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஷங்க் மித்ராவுக்கு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ‘வெல்டவர்’ என்னும் முன்னணி ஹெல்த்கேர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் (சிஇஓ) ஷங்க் மித்ரா உலகளவில் அதிக ஊதியம் பெறும் சிஇஓக்களில் 2 ம் இடம் பிடித்துள்ளார். ஷங்க் மித்ராவின் ஆண்டு ஊதியம் 821 மில்லியன் டாலர்( ரூ.7,744 கோடி) என வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை தெரிவித்துள்ளது.

உலகளவில் ஷங்க் மித்ராவின் சம்பளத்தை விட தொழிலதிபர் எலான் மஸ்க் மட்டுமே அதிக சம்பளம் பெறுகிறார். அவருடைய ஊதியத்தின் மதிப்பு 158 பில்லியன் டாலர்கள்(ரூ.14 ஆயிரம் கோடி) ஆகும். மேற்குவங்கம், கொல்கத்தாவில் பிறந்த ஷங்க் மித்ரா, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற அவர், உலகப் புகழ்பெற்ற கொலம்பியா பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

தனது தொழில் வாழ்க்கையை புகழ்பெற்ற பிடபிள்யூசி என்ற நிறுவனத்தில் தொடங்கினார். அங்கு 5 ஆண்டுகள் நிதி மற்றும் வணிக ஆலோசனை பிரிவில் பணியாற்றினார்.பிறகு 2009-ல் பிடெலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் அனலைஸ்ட்டாக பணியில் சேர்ந்தார். கடந்த 2016-ம் ஆண்டு வெல்டவர் நிறுவனத்தில் இணைந்த மித்ரா, கடுமையான உழைப்பால் 2018-ல் முதன்மை முதலீட்டு அதிகாரியாகவும் பின்னர் 2020 அக்டோபரில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Elon Musk ,Washington ,Shank Mitra ,US ,Weldover ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...