- மணிகாம் தாகூர்
- தமிழ்
- தமிழ்நாடு
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- கேசி வேணுகோபால்
- தில்லி
- மானிக்கம் டகூர்
- காங்கிரஸ் கட்சி
டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. செல்வப்பெருந்தகை மாற்றம் தேர்தல் முடிந்தவுடனேயே நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. செல்வபெருந்தகையும் தன்னை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றுமாறு கோரிக்கை விடுத்ததாக கூறியிருந்தர். இந்த நிலையில், மாணிக்கம் தாகூரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது.
புதிய தலைவர் நியமனம் உடனே அமலுக்கு வருவதாக காங். பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். மேலும், இதுநாள்வரை கட்சிக்கு செல்வப்பெருந்தகை அளித்த பங்களிப்புக்கு கே.சி.வேணுகோபால் பாராட்டும் தெரிவித்துள்ளார். விருதுநகர் மக்களவைத் தொகுதி எம்.பி.யான மாணிக்கம் தாகூர், மக்களவை கொறடாவாகவும் இருக்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். மாணிக்கம் தாகூர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் அணுக்கமாகச் செல்லக் கூடியவர் என்றும் கூறப்படுகிறது.
2009, 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
