×

அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் 4ம் ஆண்டு துவக்க விழா

திருச்சி, மார்ச் 10:  அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி துவங்கப்பட்டது. திருச்சி கே.கே. நகர் வயர்லெஸ் சாலையில் செயல்பட்டு வரும் இந்த முதியோர் இல்லத்தில் முதியவர்கள் பலர் தங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும் கோவை மேட்டுப்பாளையம், கரூர், பெரம்பலூரிலும் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் கிளைகள் துவங்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் இதன் 4ம் ஆண்டு துவக்க விழாவும், அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் நிறுவனரும் தலைவருமான செந்தில்குமாரின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. திருச்சி வயர்லெஸ் சாலையில் உள்ள ஆர்.டி.மினி ஹாலில் வைத்து நடைபெற்ற விழாவிற்கு அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் டாக்டர்.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ராக்போர்ட் டைம்ஸ் வார இதழ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர் லெஷ்மி நாராயணன், எப்.எஸ்.எம்.எஸ். சிஇஓ பிரேமி செல்வராஜ், இந்திய நாடார் பேரவை தலைவர் சுரேஷ், மாவட்ட அரிமா சங்கத்தை சேர்ந்த வசந்தகுமார், ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜான் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வாழ்த்திப்பேசினர். விழாவில் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் தலைவர் பிறந்த நாளை கேக் வெட்டி அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் தலைவர் கூறும்போது நாங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் சிறப்பாக செய்லபட உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும், மேலும் இந்த முதியோர் இல்லம் மென்மேலும் வளர நிதி உதவி வழங்க முன்வர வேண்டும் என்றார். துணைத்தலைவர் டாக்டர் கார்த்திகேயன் கூறும்போது கொரோனா காலகட்டத்தில் முதியோர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து அவர்களை கண்காணித்து மருத்துவ உதவிகள் வழங்கி வந்துள்ளோம் என்றும், கொரோனா தொற்று முதியோர்களுக்கு பரவாமல் இருக்க கிருமி நாசினி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு பாதுகாத்ததாகவும் தெரிவித்தார். விழாவில் முதியோர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக இன்னிசை கச்சேரி நடைபெற்றது. விழாவில் முதியோர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Closing Hands Retirement ,Home ,Annual Opening Ceremony ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...