×

முசிறி சட்டமன்ற தொகுதியில் வாகன சோதனையில் ரூ.3.92 லட்சம் பறிமுதல்

முசிறி, மார்ச் 10: முசிறி தொகுதியில் பறக்கும் படை அலுவலர்கள் வாகன தணிக்கையில் கணக்கில் வராத ரொக்கப் பணம் ரூபாய் 3,92,220 பறிமுதல் செய்துள்ளனர். முசிறியில் பறக்கும் படை அலுவலர் பன்னீர்செல்வம், எஸ்ஐ பாலசுப்பிரமணியன் ஆகியோர் தொட்டியம் மாதா கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த கனரக வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் சேலம் அயோத்தியா பட்டினத்தை சேர்ந்த டிரைவர் சவுந்தர்ராஜன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 420 இருந்தது.அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்தனர் . இதேபோல் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரண்யா ,எஸ்ஐஆசைதம்பி ஆகியோர் திருச்சி நாமக்கல் சாலையில் ஏழூர்பட்டி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் கர்நாடகா மாநிலம் கோனார் மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் ராமநாதபுரத்தில் தக்காளி லோடு இறக்கிவிட்டு கர்நாடகா செல்வதாக கூறினார் .அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரொக்க பணம் 80ஆயிரம் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

மேலும் அதே வழியாக வந்த லாரியைசோதனையிட்டபோது புதுக்கோட்டையில் தக்காளி லோடு இறக்கிவிட்டு கர்நாடகா சென்ற டிரைவர் வினோத் என்பவரிடம் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தா.பேட்டை அருகே ஜெம்புமடை கைகாட்டி என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தீபா மற்றும் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தேவானூரை சேர்ந்த பாலாஜி என்பவர் மாடு விற்ற பணம் 98 ஆயிரத்து 800 ரூபாய் கொண்டு வந்துள்ளார் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் மொத்தம் ரூ. 3 லட்சத்து 92 ஆயிரத்து 220ஐ முசிறி தாசில்தார் சந்திர தேவநாதன், துணை தாசில்தார் லதா ஆகியோர் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Musiri assembly ,
× RELATED பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி...