×

பாராளுமன்றம் - சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்த வேண்டும்

மன்னார்குடி, மார்ச் 10: பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக் கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் 67ம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழா முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரவள்ளி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன் ஆகியோர் தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது. மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பூபதி, நகர செயலாளர் மீனா ம்பிகை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில துணை தலைவர் மாலா பாண்டியன் பங்கேற்று மகளிர்தின வரலாறு குறித்து பேசினார். விழாவில் கலந்து கொண்ட பெண்கள், பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்திட வேண்டும். பள்ளி, கல்லூரி உள்ளிட்டு பெண்கள் பணி செய்யும் இடங்களில், பொது இடங்களிலும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்திட வேண் டும். குடும்ப வாழ்க்கை சீரழிவிற்கும், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வன்முறை சம்பவத்தில் ஈடுபடு காரணமாகவும் உள்ள மதுபான கடைகளை அகற்றி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், ஜாதி மறுப்பு திரு மணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பும், அரசு வேலை யும் வழங்கிட வேண்டு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மன்னார்குடி, மார்ச் 10: டிசம்பர் 3 இயக்கம் ஒருங்கிணைந்த மாற்று திறனாளிகள் நலசங்கத்தின் திரு வாரூர் மாவட்ட தலைவர் ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது : மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 அத்தியாயம் 2 பிரிவு 11-ன்படி வாக்களிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியும் மற்றும் தேர்தல் தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளை எளிமையாக புரிந்துக் கொள்ளுதல் மற்றும் அணுகக் கூடிய வசதியையும் உறுதி செய்திட வேண்டும்.
1அடி உயரம், 12அடி நீலம், 5.5அடி அகலம், இந்த அளவில் சாய்வுதளம் அமை க்கப் பட வேண்டும் ஆனால் சில இடங்களில் செங்குத்தான அளவில் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்குசாவடி க்கு துணையாளரை அழைத்து செல்ல அனுமதி தர வேண்டும். வீல்சேரில் செல்லும் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்குபதிவு செய்ய வாக்குளிக் கும் இடத்தை விரிவுப்படுத்த வேண்டும். தபால் வாக்கு அளிக்க கட்டாயப்படுத்தாமல் மாற்று திறனாளிகளுக்கென நடமாடும் வாக்குச்சாவடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சைகை மொழி பெயர்ப்பாளர்கள் அனைத்து வாக்கு சாவடிகளில் நியமிக்க வேண்டும். வாக்குச் சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் காத்திருக்க வைக் காமல் முன்னுரிமை அழப்படையில் வாக்கு செலுத்த அனுமதிக்க வேண்டும்.

தவழ்ந்து செல்லும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சரியான உயரத்தில் வாக்கு எந்திரம் ஏதுவான வகையில் அமைக்கப்பட வேண்டும். வாக்குசாவடிக்கு செல்லும் ஆசிரியர், கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர் வாக உதவியாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர்களுக்கு காது,வாய், பேச இயலாத மாற்றுத் திறனாளிகளை கையாளுவது பற்றி அடிப்படை பயிற்சி வழங்க வேண்டும். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் சிரமமன்றி வாக்குபதிவு செய்ய மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உரிய ஏற்பாடுகளை செய்துதர வேண்டும். இவ்வாறு அதில் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Tags : Parliament ,Legislature ,
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...