பாடாலூர் அருகே பஞ்சு மில்லில் 2வது முறையாக மீண்டும் தீ

பாடாலூர், மார்ச் 10: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே ஏற்கெனவே பற்றி எரிந்த தனியார் பஞ்சு மில்லில் வெளியே போடப்பட்டிருந்த பஞ்சுகள் நேற்று திடீரென தீப்பற்றியது. ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமம் அருகே, சிறுகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் (52) என்பவருக்கு சொந்தமான பருத்தி மில் உள்ளது. இங்கு, விவசாயிகளிடருந்து கொள்முதல் செய்யப்படும் பருத்தியை அரைத்து பஞ்சு தனியாக பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பஞ்சு மில்லில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி எதிர்பாராத விதமாக திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் பருத்தி மற்றும் பஞ்சு எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தில் சேதமடைந்த பஞ்சை மில்லிற்கு வெளியே போட்டு வைத்து இருந்தனர். அதில் நேற்று எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

Related Stories:

>