×

அடிப்படை வசதிகள் செய்து தராததால் தாணிக்கோட்டகத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு

வேதாரண்யம், மார்ச் 10: அடிப்படை வசதி செய்து தராததால் தேர்தலை புறக்கணிப்பதால் வேதாரண்யம் அருகே பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி வைத்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் ஊராட்சி 4வது வார்டில் உள்ள குட்டிதேவன்காடு, வானங்காடு பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தடுக்கக்கோரி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அடிப்படை வசதி செய்து கொடுக்காததால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று பதாகைகளை பொதுமக்கள் வைத்துள்ளனர். மேலும் தாங்கள் வகிக்கும் பகுதியில் உள்ள மண் சாலையின் முகப்பு பகுதி மற்றும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியுள்ளனர்.

Tags : Thanikottakam ,
× RELATED தாணிக்கோட்டகம் ஆகாச மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா