×

வேட்புமனு தாக்கல் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை என்ன? தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி: வேலூரில் டிஆர்ஓ தலைமையில் நடந்தது

வேலூர், மார்ச் 10: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை 20ம் தேதியும், 22ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்காக ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை குறித்த பயிற்சி நேற்று முன்தினம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டிஆர்ஓ பார்த்தீபன் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தப்படி வேட்புமனு தாக்கல் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டும். வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிவரை தாக்கல் செய்ய வேண்டும். 11 மணிக்கு முன்பே 3 மணிக்கு பின்போ எக்காரணத்தை கொண்டும் வேட்புமனுவை பெறக்கூடாது. சரியாக 3 மணிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வந்தால் அவர்களில் கடைசியாக வந்த நபர்களிடம் டோக்கன் வழங்க வேண்டும். வேட்பு மனு தாக்கலுக்கு வரும் வேட்பாளர்கள் 100 மீட்டர் தொலைவிற்கு இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரின் அறையில் உள்ள கடிகாரத்திலும், வீடியோ கேமராவிலும் சரியான நேரத்தை காட்டும்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Vale ,DRO ,
× RELATED ஊட்டி மகளிர் தின விழாவில் நடனமாடிய கலெக்டர், டிஆர்ஓ