மகளிர் தின விழா

சேலம், மார்ச் 10:சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சேலம் கொண்டலாம்பட்டி அடுத்த உத்தமசோழபுரத்தில் சுதன் டியூசன் சென்டர் சார்பில் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், தனியார் பள்ளி ஆசிரியர் கீதா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், வார்டு உறுப்பினர்கள் இளவரசி ரகு, பாலமணிகண்டன், ஆசிரிய பயிற்றுநர் வாணி மற்றும் சிந்துஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மான்விழி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பெண்மையின் மகத்துவம் குறித்து பேசினார். விழாவில், மகளிர் தினத்தையொட்டி கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து,ஓவியப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதேபோல் உத்தமசோழபுரத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினருக்கும் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, மாணவி மேனகாவின், சிலம்பாட்டம் நடந்தது. முடிவில், சதீஸ்குமார் நன்றி தெரிவித்தார்.    

Related Stories:

>