×

புகையிலை விற்ற 3 கடைகளுக்கு சீல்

 

நத்தம், ஜூன் 25: நத்தம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி ஆலோசனையின் பேரில் நத்தம் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர் சாதிக், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி ஆகியோர் நத்தம் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அய்யாபட்டியில் லெட்சுமி, மூங்கில்பட்டியில் மணிமுத்து, பண்ணியாமலையில் சாமிக்கண்ணு ஆகியோரது கடைகளில் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த மொத்தம் 1,300 கிராம் புகையிலை பொருட்களை கைப்பற்றி தலா ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து 3 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

 

Tags : Natham ,District Food Safety ,Officer ,Kalaivani ,Natham Food Safety… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...