×

வன்கொடுமைகளை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

 

திருச்சி, ஜூன் 25: மாநிலத்தில் பெண்களுக்கு நிலவும் வன்கொடுமைகளை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்திய மாதர் தேசிய சம்மேளனம் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் திருச்சி சோமரசன்பேட்டை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க சம்மேளனத்தின் மாநகர மாவட்ட செயலாளர் ஆஞ்சுகம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை தடுத்து நிறுத்த வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை கட்டுபடுத்த வேண்டும், தனி காவல் படையை அமைத்து அரசு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஏராளமான சம்ளேன உறுப்பினர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags : Indian ,Mother National Conference ,Trichchi ,National Congress of Indian Mothers ,Indian Mother National Council ,Trichy Somarasanpet ,Trichy Managar District Council ,
× RELATED குட்கா விற்றவர் கைது