திருச்சுழி தொகுதிக்கு 398 வாக்கு இயந்திரங்கள் வருகை

காரியாபட்டி, மார்ச் 9:  திருச்சுழி தொகுதிக்கான 398 வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று வந்து சேர்ந்தன. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6ல் நடைபெற உள்ளது. தேர்தல் இயந்திரங்களை அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. திருச்சுழி தொகுதியின் 318 வாக்குசாவடிகளுக்கு 398 வாக்குப்பதிவு இயந்திரம், 398 கட்டுப்பாட்டு இயந்திரம், 414 விவி பேட்  இயந்திரங்கள் காரியாபட்டியில் உள்ள சிஇஓஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது.

இதனை திருச்சுழி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசன்,  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சந்திரசேகரன், சிவக்குமார் ஆகியோர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், பேரூர் செயலாளர் செந்தில், ஒன்றிய கவுன்சிலர்கள்  சிதம்பரபாரதி, சேகர், அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், பாஜக பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உட்பட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் வைத்தனர். உடன் கல்லுப்பட்டி வி.ஏ.ஓ காசிமாயன் உட்பட அதிகாரிகள் இருந்தனர்.  வருவாய்த் துறையின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயங்கரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>