×

ஏரல், நாசரேத் பகுதியில் திடீர் கோடை மழை

ஏரல், மார்ச் 10: ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை விட்டு விட்டு 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரல் காந்தி சிலை பஸ் ஸ்டாப் அருகில் சாலையில் வாகனம் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரல் பேரூராட்சி அலுவலகம் அருகில் இருந்து பஜார் பகுதிக்கு செல்லும் நுழைவு வாயில் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து பஜார் பகுதிக்கு செல்லும் நுழைவு வாயில்களில் சாக்கடை ஓடை நிறைந்து மழைநீருடன் சேர்ந்து நுழைவு வாயில்களில் முட்டளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பஜார் பகுதிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

நாசரேத்: நாசரேத் மற்றும் அதன் சுற்றுபகுதிகளிலும் நேற்று அதிகாலை 4.30 மணிமுதல் 9 மணி வரை விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது. நாசரேத் மர்காஷிஸ் ரோடு மற்றும் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் தண்ணீர் தேங்கி கிடந்தது. இரு சக்கரம் மற்றும் வாகனஓட்டிகள் தட்டு தடுமாறி வாகனங்களை ஓட்டி சென்றனர். மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. திடீரென்று பெய்த கோடை மழையினால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Eral, Nazareth ,
× RELATED ஏரல், நாசரேத் பகுதியில் திடீர் கோடை மழை