×

கள்ளழகர் கோயில் கும்பாபிஷேகம்

போடி, மார்ச் 9: போடி அருகே கள்ளழகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. போடி அருகே நாகலாபுரம் கிராம ஊராட்சி கெஞ்சம்பட்டியில் பாமா ருக்மணி சமேத கள்ளழகர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மண்சுவர் மற்றும் கூரை வேயப்பட்டிருந்தது.  தற்போது கட்டிடம் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக நடந்த கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். கோயில் வளாகத்தில் சீலைக்காரியம்மன், பதினெட்டாம்படி கருப்பசாமி, நவக்கிரஹம்  உட்பட உப சுவாமிகளும் நிறுவப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கோபுர கும்பத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டது.

Tags : Kallazhagar Temple Kumbabhishekam ,
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...