×

மலேசியாவில் காணாமல் போன சூளகிரி எலக்ட்ரீசியன் கண்டுபிடிப்பு


கிருஷ்ணகிரி, மார்ச் 10: மலேசியாவில்  காணாமல் போனதாக கூறப்பட்ட, சூளகிரியை சேர்ந்த எலக்ட்ரீசியனை கண்டுபிடித்த  நிலையில், அவரை இந்தியாவிற்கு அழைத்து வர தூதரகம் மூலம் கலெக்டர் நடவடிக்கை  எடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவை  சேர்ந்தவர் லட்சுமி(30). இவர் தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன், கடந்த மாதம் 25ம் தேதி கிருஷ்ணகிரி எஸ்.பி., அலுவலகத்தில் கோரிக்கை மனு  ஒன்றை அளித்திருந்தார். அதில், எனது கணவர் ஞானவேல்(37) எலக்ட்ரீசியனாக  பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள  ஜெகுபாரூர் என்ற இடத்தில் டவர் அமைக்கும் வேலை செய்ய, கடந்த 16.8.2019 கோலாலம்பூர் சென்றார். கடந்த ஒன்றரை ஆண்டாக அங்கு 5  பேர் ஒன்றாக அறை எடுத்து தங்கி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த  மாதம் 21ம் தேதியன்று, அவருடன் தங்கியிருந்த இந்து என்பவர், எனது செல்போனுக்க தொடர்பு கொண்டு, உனது கணவரை காணவில்லை என தெரிவித்தார். எனவே தாங்கள் எனது கணவர் ஞானவேலை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கோரியிருந்தார்.

இதனிடையே லட்சுமியை தொடர்பு கொண்ட ஞானவேல், தான் வேறு ஒரு இடத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரிவதாகவும், தன்னை  இந்தியாவிற்கு அழைத்துச்செல்ல உதவுமாறும் கேட்டுள்ளார். இதையடுத்து லட்சுமி, கணவரை மீட்டுத்தரும்படி மாவட்ட கலெக்டர்  ஜெயச்சந்திரபானு ரெட்டியிடம் மனு வழங்கிானர். இதையடுத்து அவர் ஞானவேல் அழைத்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு,  ஞானவேல் பணியாற்றும் உணவகத்தின் உரிமையாளரிடம் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு,  இதுகுறித்து கலெக்டர் தகவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு சிக்கியுள்ள ஞானவேலை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஞானவேலின் குடும்பத்தினர்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Choolagiri ,Malaysia ,
× RELATED காரில் கொண்டு சென்ற ₹1.67 லட்சம் பறிமுதல்