காஞ்சிபுரம் ஜோஸ் ஆலுக்காஸில் மகளிர் தினவிழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சர்வசதேச மகளிர் தினவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் கிளை மேலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை மேலாளர் ரெய்ஜூ ரெய்பேல் வரவேற்றார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 16 பெண்களை கௌரவப்படுத்தும் வகையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்காக உருவாக்கப்பட்ட விளம்பரப் படமான ஷைன் ஆன் கேர்ள் என்ற விளம்பரப்பட முதல் பார்வை வெளியிடப்பட்டது. விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், வாடிக்கையாளர்கள், பெண்கள் என அனைவருக்கும் இனிப்பு வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

Related Stories: