×

மளிகை கடையில் மூட்டை மூட்டையாக பதுக்கிய ஹான்ஸ் பறிமுதல்

ராசிபுரம், ஜூன் 24: ராசிபுரத்தில் மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ரூ.90,000 மதிப்பிலான ஹான்ஸ் பாக்கெட்டுகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.ராசிபுரம் பட்டணம் ரோடு பகுதியில், உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையிலான போலீசார், பட்டணம் ரோடு பகுதியில் உள்ள மளிகை கடையில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, கடையின் உட்புறம் மறைவான இடத்தில் மூட்டை, மூட்டையாகப் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கிருந்த சுமார், 500 ஹான்ஸ் பாக்கெட்டுகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 15.980 கிலோ கிராம். பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார், 90,000 ரூபாய் இருக்கும் எனப் போலீசார் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கடை உரிமையாளர் ராசிபுரம் கண்டி வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்த இனாயத், (57) என்பது தெரியவந்தது. சட்டவிரோதமாகப் புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்து விற்றது உறுதியானதால், இனாயத்தை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Hans ,Rasipuram ,Rasipuram Pattanam Road ,
× RELATED சேலத்தில் அடுக்குமாடி வீட்டில் திருடிய வாலிபர் சுற்றிவளைப்பு