×

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மானாமதுரை: மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சிவகங்கை ரோட்டை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (37). மண்பாண்ட தொழிலாளியான இவர் நேற்று காலை 7.45 மணிக்கு தனது வீட்டில் இருந்த மின்மோட்டாரின் சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது மின்கசிவு காரணமாக சத்தியமூர்த்தி உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Manamadurai ,Satyamoorthy ,Sivaganga Road ,Manamadurai Government Union Office ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...