தேசிய சிலம்ப போட்டி பழநி சிறுவர்கள் சாதனை

பழநி, மார்ச் 9: கன்னியாகுமரியில் அகில இந்திய சிலம்ப சம்மேளனம் சார்பில் 14வது தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர். 5 வயது முதல் 10 வயது வரை உள்ள சிறுவர்- சிறுமியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டியில் பங்கேற்ற பழநியை சேர்ந்த 5 வயது சிறுவன் ரவீன் சக்கரவர்த்தி கம்பு சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.பழநியைச் சேர்ந்த 6 வயது சிறுமி நிக்கிதா கம்பு சண்டை- வாள் வீச்சு போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற சிறுவர்களை பயிற்சியாளர், பெற்றோர் என பல்வேறு தரப்பினர் பாராட்டி வாழ்த்தினர்.

Related Stories:

>